அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தர்மபுரி

பென்னாகரம்:

இந்திய ராணுவத்தில் புதிதாக நடைமுறைப்படுத்த உள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஸ் நிலையம் அருகில் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார இணை செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் கோபிநாத் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இ்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை மக்கள் அதிகாரம் அமைப்பினர் எழுப்பினர். முடிவில் மாரியப்பன் நன்றி கூறினார்.


Next Story