மத்திய அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து   கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில், நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் லலித்ஆண்டனி தலைமை தாங்கினார். சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் அப்சல், டாக்டர்.தகி, சரவணன், ஆஜித்பாஷா, குட்டி என்கிற விஜயராஜ், நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சூரியகணேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் துரைசாமி, டேனியல்சக்கரவர்த்தி, அமாவாசை, முனீர், இர்பான், பிலால், மைக்கேல், சக்திவேல், கபீர்அகமத், ரங்கராமி உள்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மோடி தலைமையிலான மத்திய அரசு, பழிவாங்கும் நோக்குடன் காங்கிரஸ் கட்சியின் முன்னனி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி எம்.பி.யை அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story