உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடாசலம், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் மணி, மாதேஸ்வரன், சுதர்சனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை காவலர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண தன்னாட்சி அதிகாரம் கொண்ட குறைதீர்க்கும் ஆணையத்தை அமைக்க வேண்டும். உள்ளாட்சி பணியாளர்களுக்கு அரசாணையில் தெரிவித்தபடி ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு பணி பதிவேடு பதிவு செய்ய வேண்டும். கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story