ஆர்ப்பாட்டம்
நெல்லையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தத.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களை கண்டித்தும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், போலீசார் நடுநிலையோடு நடந்து கொள்ள வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்தி, கிழக்கு மாவட்ட தலைவர் முத்து சரவணன், மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இளைஞர் அணி செயலாளர் தளவாய் பாண்டியன், மூர்த்தி, தங்கமாரி உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story