ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் செல்ல முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதுகாப்பு தர தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து பாடலூர் மக்கள் செல்ல முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடத்த உரிய பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்ைககள் குறித்து வலியுறுத்தப்பட்டது.



Next Story