ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கத்தினர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. காது கேளாதோருக்கு 80 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4-ல் தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு வரிசை அடிப்படையில் அரசுத்துறையில் ஒரு சதவீத வேலைவாய்ப்பு தர வேண்டும். காதுகேளாதோருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும். வாரிசு அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.



Next Story