பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி,
பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். ரமேஷ், முருகன், ராமசந்திரன், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் துரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் சரியான முறையில் டாக்டர்கள் நடந்து கொள்வது இல்லை, அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், மேல் சிகிச்சை என்று கூறி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டா்கள் பரிந்துரை செய்வதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட நிர்வாக குழுக்கள் பன்னீர்செல்வம், பாஸ்கர், குணசேகர், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகர், மோகன், மதியழகன், மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார், மாவட்டக்குழு லாரன்ஸ், மணிவண்ணன் உள்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.