மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அஞ்செட்டியில் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டியில் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வட்ட செயலாளர் மாதப்பன் தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிவலிங்கபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களுக்கு குடியிருப்புகளை சரி செய்து கொடுத்து பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் துணை தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் மனுக்கள் கொடுத்தனர்.


Next Story