ஆர்ப்பாட்டம்
சாத்தூரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
சாத்தூர்,
சாத்தூரில் நகர காங்கிரஸ் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதை கண்டித்து கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட பொது செயலாளர் தலைமை வகித்தார். சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், கிழக்கு வட்டாரதலைவர் சுப்பையா, மேற்கு வட்டார தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கண்டன உரையாற்றினார்.
Related Tags :
Next Story