பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரியில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் ஒருங்கிணைந்த பா.ம.க. சார்பில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ, மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.

அப்போது அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் தற்போது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளிலும் குட்கா விற்பனை நடக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடகத்தில் இருந்துதான் தமிழகம் முழுவதும் குட்கா கடத்தப்படுகிறது. குட்கா விற்பவர்கள், கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மேகநாதன், பா.ம.க. தொழில் நுட்ப பிரிவு மாநில தலைவர் ஓசூர் வக்கீல் கனல் கதிரவன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ், சிவானந்தம், நிர்வாகிகள் வெங்கடேச செட்டியார், பழனிவேல், ராஜா, மாதப்பன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story