சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பொன்னி, மாவட்டதலைவர் மணி, மாநில பட்டு வளர்ச்சி சங்க பொருளாளர் கல்யாணசுந்தரம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன், மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாநில செயலாளர் கோதண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். மேலும் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களே வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் சத்துணவு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் நீலா நன்றி கூறினார்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய தலைவர் அழகேசன், ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் பத்மாஸ்ரீ, மாவட்ட துணைத்தலைவர் காந்திமதி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி சுபாஷ் சந்திரபோஸ் உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு அமைப்பாளர்களே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story