ஆர்ப்பாட்டம்
தாயில்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை வடக்கு வட்டார தலைவர் செல்வக்கனி முன்னிலை வகித்தார். கிழக்கு வட்டாரத் தலைவர் கணேசன் வரவேற்றார்.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் கலந்து கொண்டு பேசினார். இதில் ரகுராமன் எம்.எல்.ஏ., மாதாங்கோவில் பட்டி அமல்ராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story