தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பாரதி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அருண் வரவேற்றார். மாவட்ட தலைவர் சனாவுல்லா முன்னிலை வகித்தார். மாநில தொழிற்சங்க தலைவர் ஜம்புலிங்கம் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செந்தில் முருகன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் முருகன், துணை செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் பாபு, ஞானவேல், முருகேசன், லட்சுமி, மன்னன், மகேந்திரன், முகேஷ், மூர்த்தி, சுரேஷ், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தங்கம் சக்திவேல் நன்றி கூறினார்.