ஆர்ப்பாட்டம்
17 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 16-ந் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தொடங்கிய இந்த கூட்டமைப்பின் விழிப்புணர்வு பயணத்தினர் நேற்று விருதுநகர் வந்தனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே கூட்டமைப்பின் சார்பில் 17 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பயணம் வருகிற 30-ந் தேதி சென்னை காந்தி மண்டபம் முன்பு நிறைவடைகிறது.
Related Tags :
Next Story