ஆர்ப்பாட்டம்
விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருநெல்வேலி
களக்காடு:
களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், கலப்பட உரங்களை கண்டுபிடித்து தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், துணைச்செயலாளர்கள் லெனின் முருகானந்தம், பாலன், பொருளாளர் அயூப்கான், நகர செயலாளர் முத்துவேல், இளைஞர் அமைப்புச் செயலாளர் திருமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story