ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் முன்பு தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க விருதுநகர் மாவட்டக்கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெண்ணிற கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன் செந்தில்வேல், மாநில செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். சாலை பணியாளர்களின் 41 நாள் பணிநீக்கத்தை முறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டுள்ள சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். தொழில்நுட்ப தகுதி இல்லாத சாலை பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story