தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை மேலப்பாளையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குஜராத் கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் மாநில அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமை தாங்கினார். வளவன், அம்பை ராஜ், வள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொறுப்பாளர் கலைவேந்தன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்துவளவன், திராவிட தமிழர் கட்சி நெல்லை கதிரவன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின், ம.ஜ.க. செயலாளர் நெல்லை நிஜாம், நெல்சன், கிங்சன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story