மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

மல்லசமுத்திரம் ஒன்றியம் மரப்பரை கிராமம் தென்னமரத்துபாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில், நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்காமல் விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கும், காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்திற்கும், திருமணம் ஆகாதவர் என 13 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை ரத்து செய்து நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும். சட்டவிதிகளை கடைபிடிக்காமல் பட்டாக்கள் வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஏளூர் வார்டு உறுப்பினர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story