ஆர்ப்பாட்டம்
வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். வத்திராயிருப்பு பேரூராட்சி தலைவர் தவமணி முன்னிலை வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். வத்திராயிருப்பு பகுதியில் தொடர் திருட்டு நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டியன், தாலுகா துணை செயலாளர் மகாலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் துவான்ஷா, அழகர்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story