இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேடியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர், ஐயப்ப சமாஜம் நிர்வாகி முரளி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து இந்து மக்களையும், இந்து கடவுள்களையும் இழிவுப்படுத்தி பேசி வரும் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story