இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பரமத்திவேலூரில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
பரமத்திவேலூர்
இந்துக்களை அவதூறாக பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்துக்களை அவதூறாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் தனது எம்.பி. பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழிகளை மீறி பேசிய ராசாவின் எம்.பி. பதவி பறிக்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story