ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

திருச்சுழியில் மது மற்றும் போதைப்பொருட்களை தடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழியில் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருட்களை தடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி பாண்டியர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் பாண்டியன், மாவட்ட இளைஞரணி தலைவர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாகவும் அவற்றை காவல்துறையினர் மற்றும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story