மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எலச்சிபாளையம்
எலச்சிபாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எலச்சிபாளையம் வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வீட்டுமனை நிலம் கொடுத்தும் நிரந்தர பட்டா கேட்டும், கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும், கோக்கலை கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் ஆகியோர் கிராமத்திலேயே தங்கி பணிபுரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றிய நிர்வாகிகள் குப்புசாமி, ரமேஷ், சக்திவேல், கிட்டுசாமி ராஜ், ரஹமத், ஈஸ்வரன் எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் மாரிமுத்து உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.