ஆர்ப்பாட்டம்
தி.மு.க. இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
விருதுநகரில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிடவும் ஒரே நுழைவுத் தேர்வு திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நகர் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குரு ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், நகரசபை தலைவர் மாதவன், நகர செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தனபாலன், நகர ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமைக்கழகத்திலிருந்து வந்திருந்த சபாபதி மோகன், கொக்கரக்கோ சவுமியன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story