மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓசூர் ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாநகர செயலாளர் ஜெயராமன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நந்திமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நிலவி வரும் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும். சப்ளம்மா கோவில் நிலத்தை, சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து பதிவு செய்து தற்போது பட்டா வாங்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கோவில் பெயரிலேயே பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Next Story