உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும், விவசாயம் மற்றும் மின்சாரத் துறையை தனியார் மையமாக் கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கமிட்டி குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஏழுமலை, கல்யாணி, கந்தசாமி, தட்சிணாமூர்த்தி, கலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், ராஜசங்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Related Tags :
Next Story