ஆர்ப்பாட்டம்
நெல்லை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழகத்தில் தென் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்களில் போலி பத்திரம் மூலம் சோலார் பேனல்களையும், காற்றாலைகள் நிறுவுவதை கண்டித்து நேற்று முன்தினம் தீபாவளியை கருப்பு தினமாக கொண்டாடினார்கள்.
நெல்லை மாவட்டம் மானூர் தாலுகாவில் உள்ள தென்கலம், நல்லம்மாள்புரம், புளியங்கொட்டாரம், தென்கலம்புதூர், பள்ளமடை, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம், நாஞ்சான்குளம் ஆகிய கிராமங்களில் கருப்பு தினம் தீபாவளியாக அனுசரிக்கப்பட்டது. நாஞ்சான்குளத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச்செயலாளர் தேவேந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சந்திரசேகர் மற்றும் சமுத்திரம், சோமு, குமார் மற்றும் அந்த பகுதி இளைஞர்கள் நாஞ்சான்குளத்தில் பேனர் வைத்து கொடிகள் கெட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.