இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநில செயலாளர் அசோக் தலைமை தாங்கினார். இதில் மாநில செய்தி தொடர்பாளர் இறையருள், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராமஜெயம், மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் மீண்டும் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க முழுமையான உஷார் நிலை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story