வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை கோர்ட்டு வளாகம் அருகில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி வக்கீல்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது நடைமுறையில் இல்லாத மனுஸ்மிருதி புத்தகத்தை வைத்து தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வலியுறுத்தியும், அந்த கட்சி தலைவர் திருமாவளவனை கைது செய்ய கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜனதா வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், பா.ஜனதா வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சிவசூரியநாராயணன் மற்றும் வக்கீல்கள் வெற்றிவேல், கண்ணன், சிவபெருமாள், பேச்சிமுத்து, ராமசுப்பு, முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story