ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்த சிறுவன் கவி தேவநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டான். இந்தநிலையில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறிது நேரத்தில் அவன் பரிதாபமாக இறந்தான். சிறுவனின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் நகர செயலாளர் மாரியப்பன், மாதர் சங்க நகர தலைவர் மைதிலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story