ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
தமிழக அரசு சுகாதாரப்பணிகள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து விஜயபாண்டி பேசினார். போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர் செயலாளர் முருகன் பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். இதில் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story