எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி தலைவர் சதாம் உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கலில் வரவேற்றார். எஸ்.டி.டி.யூ. மாநில தலைவர் முஹம்மத் ஆசாத், கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, அஹலே சுன்னத்வல் ஜமாத் சொசைட்டி தலைவர் சையத் இர்பானுல்லா உசேனி, ஷாஜி மஸ்ஜித் தலைவர் முஷ்தாக் அஹமத், பூரா மஸ்ஜித் தலைவர் ஜாவித் பாஷா, பூரா மஸ்ஜித் துணைத் தலைவர் ஹபீப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மத்திய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் கவுஸ்பாஷா, அஸ்லம்பாஷா, தாஜ், அக்பர்பாஷா, முகமது உமர், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பாரதி ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் சனாவுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story