சொத்து வரி, பால் விலை, மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு:தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


சொத்து வரி, பால் விலை, மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு:தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

சொத்து வரி, பால் விலை, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

அந்த வகையில் தேன்கனிக்கோட்டைபேரூராட்சி அலுவலகத்தின் முன்பும் மற்றும் கெலமங்கலம் பஸ் நிலையத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.

ஆன்லைன் ரம்மி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, 'தமிழக கவர்னர் செயல்பாட்டில் அதிருப்தியடைந்துள்ள தி.மு.க., அதை நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரை கவர்னர் சரியாக தான் செயல்படுகிறார். ஏற்கனவே கவர்னரை சந்தித்து தி.மு.க. அரசின் தவறுகளை நாங்கள் சுட்டி காட்டியுள்ளோம். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு ஆகும்' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், எம்.ஜி.ஆர். மன்ற மேற்கு மாவட்ட இணை செயலாளரும், ஓசூர் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான ஜெய்பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், பேரூராட்சி கவுன்சிலர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சம்பங்கி ராமையா, கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் அசேன், கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், வார்டு உறுப்பினர்கள் என ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

நாகரசம்பட்டி

இதேகோரிக்கையை வலியுறுத்தி, நாகரசம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கோ.ரவிச்சந்திரன், மாவட்ட பால் வள தலைவர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், கட்சியின் ஒன்றிய அவைத்தலைவர் வடிவேலன், நகர துணை செயலாளர் செந்தில், மாவட்ட பிரதிநிதி சரவணன், மற்றும் நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவை தலைவர் வைரமணி நன்றி கூறினார்.

பர்கூர்

இதேபோன்று பர்கூர் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பர்கூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், நகர செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுமதி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தூய மணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாதையன், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் அபிஷேக், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரளாக கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்தும், பால், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணத்தில் வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கொட்டும் மழையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் விமல் வரவேற்று பேசினார். இதில், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மாவட்ட செயலாளருமான கே.அசோக்குமார் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.

ஒன்றிய செயலாளர் பையூர் பெ.ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் வாசுதேவன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பி.டி.சுந்தரேசன், நகர துணை செயலாளர் அருள் மூர்த்தி, நகர அவைத்தலைவர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சங்கீதா கேசவன், மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன், மாவட்ட கவுரவ தலைவர் விக்ரம் குமார், நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி தலைவர் மதனகோபால் நன்றி கூறினார்.

ஊத்தங்கரை

தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நகர செயலாளர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், தேவராஜன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் இளையராஜா, முன்னாள் தொகுதி செயலாளர் திருஞானம், முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய அவை தலைவர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் சேட்டு குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புசாமி, ராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுவாமிநாதன், ஜீவானந்தம் மற்றும் ஊத்தங்கரை பேரூர், மத்தூர் ஒன்றியம், ஊத்தங்கரை ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story