ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், வெளியுறவுதுறை மந்திரியுமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடியை விமர்சித்ததோடு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் குற்றம் சாட்டினார். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விருதுநகரிலும் பழைய பஸ் நிலையம் அருகே நகர பா.ஜ.க. தலைவர் நாகராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மேற்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story