ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இ்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு பா.ஜ.க. விவசாய அணி மற்றும் ராஜபாளையம் விவசாய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் மகேஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய அணி மாநில துணைத்தலைவர் தேவர், மாநில செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தேசிய விவசாய ஆராய்ச்சி பிரிவு பொறுப்பாளர் பாலசுப்ரமணியம், மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு, மாநிலத் திட்ட பொறுப்பாளர் ராமச்சந்திரன் ராஜா, மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனியார் சர்க்கரை ஆலை கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இ்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story