முஸ்லிம் மாணவர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
புளியங்குடியில் முஸ்லிம் மாணவர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புளியங்குடி:
புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அமைப்பான தென்காசி மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவையின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறுபான்மை மாணவர்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை மவுலானா அபுல்கலாம் ஆசாத் அறக்கட்டளை சார்பில் வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி டி.என்.புதுக்குடி காமராஜர் சிலை அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார். பொருளாளர் செய்யது இப்ராஹிம், துணைத் தலைவர் கலீல் ரகுமான், புளியங்குடி நகர தலைவர் அப்துல் ரகுமான், நகர செயலாளர் ஹபிபுல்லா, பொருளாளர் முகம்மது சுலைமான், நகரசபை கவுன்சிலர்கள் முகம்மது நயினார், சேக்காதர் மைதீன், முகம்மது நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கோட்டை தமீம் ஆலம் கிராஅத் ஓதினார். மாவட்ட பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் மைதீன் பிச்சை வரவேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜீத் கண்டன உரையாற்றினார்.
முஸ்லிம் யூத் லீக் மாநில துணை தலைவர் செய்யது பட்டாணி, முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் அப்துல் வகாப், தென்காசி முகம்மது அலி, வாசுதேவநல்லூர் செய்யது, கடையநல்லூர் இசக்கி ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் வி.ஏ.எம்.இக்பால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹிம், காதர் மைதீன், நகர துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.