பா.ஜனதா விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
சூளகிரியில் பா.ஜனதா விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி
பொங்கல் பரிசுடன் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கக்கோரி சூளகிரியில் மேற்கு மாவட்ட பா.ஜனதா விவசாய அணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூளகிரி ரவுண்டானாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், மாநில விவசாய அணி துணைத்தலைவர் கோவிந்தரெட்டி, மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் பரிசில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வழங்ககோரியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரியும் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.