அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே உள்ள காட்டேரி ஊராட்சி வெப்பாலம்பட்டி கிராமத்தில் ஒருவர் அரசு புறம்போக்கு நிலத்தில் 60 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலத்தை தாசில்தார் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாசில்தாரை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர், பேரூராட்சி கவுன்சிலர் சிவன், மனிதநேய மக்கள் கட்சி வாசித்பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ரபீக், நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் எத்திராஜ், மகாலிங்கம் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story