ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழுவினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழுவினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்

போக்குவரத்து ஓய்வூதியர்களின் மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் மாவட்ட மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் அழகிரிசாமி, மணி, பெரியசாமி, பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் ராமசாமி நன்றி கூறினார்.


Next Story