அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ரொக்கமாக அகவிலைப்படியை வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் உச்ச வரம்பை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கோரிக்கையை விளக்கி மாநில துணை தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசினார். இதில் கல்யாணசுந்தரம், மாரியப்பன், மணிகண்டன், மாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுகாதார போக்குவரத்துத்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
இதேபோல் மேலூர், திருமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.