கடலூரில்நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பருவகால ஊழியர்களை உடனடியாக நிரந்தரப்படுத்திட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தரமான தளவாட பொருட்கள் வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் முரளி தலைமை தாங்கினார். செயலாளர் சுதர்சன் பாபு, துணை செயலாளர்கள் செந்தில்குமார், ஸ்டாலின், வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொது செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன், செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் துணை தலைவர்கள் தினகரன், ராஜமுருகன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கலைவாணன் நன்றி கூறினார்.