காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், மாவட்ட பொருளாளர், நகர்மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் காருகுடி சேகர், சேது பாண்டியன், ஆதி, கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல்கான், மாவட்ட சார்பு அணி தலைவர்கள், மகிளா காங்கிரஸ் ராமலட்சுமி, இளைஞர் காங்கிரஸ் விக்னேசுவரன், சிறுபான்மை பிரிவு வாணி செய்யது இப்ராஹிம், பட்டியல் பிரிவு லாந்தை ராஜா, முன்னாள் ராணுவத்தினர் பிரிவு கோபால், மனித உரிமை துறை செய்யது அபுதாஹிர், சமூக ஊடக துறை ராஜவேல், ஆராய்ச்சி துறை துரைப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி நன்றி கூறினார்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட பொறுப்பு குழு தலைவருமான மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சோ.பா.ரெங்கநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் வரவேற்றார். அப்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோட்டை முத்து, ரமேஷ் பாபு, முன்னாள் சேவா தல சங்கம் பொறுப்பாளர் ராமபாண்டியன், கமுதி வட்டார தலைவர் கோவிந்தன், கமுதி நகர தலைவர் காமராஜ், சிக்கல் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கமுதி வட்டார தலைவர் கோவிந்தன் நன்றி கூறினார்.

பரமக்குடி

பரமக்குடி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கோட்டை முத்து, தெய்வேந்திரன், ரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர் வரவேற்றார். இதில் மாநில பேச்சாளர் ஆலம், மாவட்ட துணை தலைவர்கள் சோ.பா.ரெங்கநாதன், ஆதி, மகாதேவன், வட்டார தலைவர்கள் கார்மேகம், பாம்பூர் வேலுச்சாமி, ராமச்சந்திரன், கைத்தறி பிரிவு மாநில செயலாளர் கோதண்டராமன், ராஜீவ் காந்தி, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் நாராயணன், சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசு சங்க பொது செயலாளர் ஹாரிஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு காஜா நஜ்முதீன், மில்கா செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரபீக் அகமது நன்றி கூறினார்.


Next Story