தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை

மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. டெஸ்ட் பர்ச்சேஸ் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், உணவு பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், மற்ற பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், வாகன விதி மீறல் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல் நடவடிக்கையை தடுக்க வேண்டும், மின் கட்டணம், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஆகிய எரிபொருட்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், மற்ற சுங்க சாவடியில் கட்டணத்தை குறைக்க வேண்டும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

====


Next Story