ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பூதட்டியப்பா தலைமை தாங்கினார். தலைவர் அண்ணாதுரை, மாவட்ட குழு உறுப்பினர் கண்ணப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, மாநில குழு உறுப்பினர் சுந்தரவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story