ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் எண்ணற்ற கிராமங்களில் இருந்து சிகிச்சை பெற வருகின்றனர். இங்குள்ள கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். சேதமுற்று கிடக்கும் கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், தாலுகா செயலாளர் கோவிந்தன், பேரூராட்சி தலைவர் தவமணி, தாலுகா துணை செயலாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.Next Story