ஆர்ப்பாட்டம்
தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத இறுதி நாளில் வழங்கவேண்டிய ஊதியத்தை வழங்காததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ஐசக் சாம்ராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரைசாமி பாண்டியன், துணைச் செயலாளர் முருகனா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். இறுதியில் வட்டார தலைவர் கஸ்தூரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story