எல்.ஐ.சி. பங்குகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து-சிவகங்கை, காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. பங்குகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து-சிவகங்கை, காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. பங்குகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து சிவகங்கை, காரைக்குடியில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை


எல்.ஐ.சி. பங்குகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து சிவகங்கை, காரைக்குடியில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதானி குழுமத்தில் முதலீடு

எல்.ஐ.சி. பங்குகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்வதை கண்டித்து சிவகங்கை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முகமது இக்பால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் வேலாயுதம், மதியழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சோனை, சார்லஸ், மாவட்ட கவுன்சிலர் சாந்தாராணி, மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட சிறுபான்மை தலைவர் சையது முகமது, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி இமயமெடோனா, மாவட்ட துணை தலைவர்கள் சண்முகராஜன், உடையார், பொது செயலாளர் மோகன்ராஜ் மற்றும் காளீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் நன்றி கூறினார்.

மானாமதுரை

மானாமதுரை காந்தி சிலை அருகே உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பழனியப்பன், நகர்தலைவர் கணேசன், வட்டார தலைவர்கள் ஆரோக்கியதாஸ், கரு.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி கொடியை கைகளில் ஏந்தியவாறு, மத்திய பா.ஜ.க. அரசையும், அதானி குழுமத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சோனைராஜ், திருப்புவனம், இளையான்குடி, வட்டார, நகர், நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் பி.எல்.காந்தி, சாக்கோட்டை மேற்கு வட்டார தலைவர் கருப்பையா, கிழக்கு வட்டார தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் சண்முகதாஸ், மாவட்ட நிர்வாகி மணச்சை கருப்பையா, மனித உரிமை துறை நிர்வாகி டாக்டர் சேவியர், கவுன்சிலர்கள் ரெத்தினம், அமுதா, நகர செயலாளர் கே.டி.குமரேசன், முன்னாள் வட்டார தலைவர் பழனியப்பன், நகர செயலாளர் ரெயில்வே தட்சிணாமூர்த்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் வசந்தாள் தர்மராஜ், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நெல்லியான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தேவகோட்டை

தேவகோட்டை பஸ் நிலையம் எதிர்வீதியில் உள்ள பாரத ஸ்டேட் பாங்க் அலுவலகம் முன்பு எஸ்.மாங்குடி தலைமையில் காங்கிர சா்ர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேவகோட்டை நகர் கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அப்பச்சி சபாபதி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பெரி.மகேந்திரன், மாநில இலக்கிய அணி செயலாளர் சுவாமிநாதன், தேவகோட்டை வட்டாரத்தை சேர்ந்த முத்துமனோகரன், இளங்குடி முத்துக்குமார், சிரவளிநாதன், செலுகைபெத்து, சுப்பிரமணியன், கருப்பையா, செபஸ்தியான், தேவகோட்டை நகரத்தைச் சேர்ந்த வீரமணி, வேலு, செல்வம், சிராஜூதின், சங்கர், ராமச்சந்திரன், கண்ணங்குடி வட்டாரத்தைச் சேர்ந்த நடராஜன், பழனிச்சாமி, மேலாளர் இளங்கோ உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story