ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் விருதுநகர் பதிவு மாவட்ட கிளையினர் மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் முத்துச்சாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி தொடங்கி வைத்தார்.

ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி ப்ரொமோட்டர் அல்லாத ஏழை, எளிய மக்கள் மனைகளாக பதிவதில் உள்ள குழப்பங்களை நீக்க வேண்டும். தமிழக அரசின் இரு மொழி கொள்கைக்கு எதிரான மூன்றாவது மொழி தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story