கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வூதியம் உயர்த்தி வழங்கக்கோரி கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்கள் சார்பில் ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். அமைப்புசாரா, கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆரப்்பாட்டத்திற்கு ஜெய்ஜவான், ஜெய் கிஸான் மஸ்தூர் பெடரேசன் அமைப்பின் மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கவேலு, ஆறுமுகம், நாகராஜன் தனராஜ், சேலம் மாநகர மாவட்ட மதசார்பற்ற தலைவர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் கியாஸ் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் சாலையோர இரவு கடைகள், இறைச்சி கடைகள், உணவு பொருட்கள் கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story