அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

காலி பணியிடங்களை நிரப்ப கோரி தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மண்டல துணை தலைவர் பூபேஸ்குப்தா தலைமை தாங்கினார். சம்மேளன செயலாளர் முருகராஜ், மாவட்ட பொதுசெயலாளர் மணி, மண்டல பொது செயலாளர் நாகராஜன், துணைச் செயலாளர் கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்டு வரும் நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு ஏற்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story